1.தொண்டன் 1: தலைவருக்கு தேர்தல் பற்றிய அனுபவம்
இல்லேன்னு நினைக்கிறேன்..
இல்லேன்னு நினைக்கிறேன்..
தொண்டன் 2: ஏன்?
தொண்டன்1ஓட்டை பிரிச்சா வெற்றி நிச்சயம்-ன்னு
சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்
தான்னு சொல்லிட்டு கூரைமேல ஏறிட்டாரு.
சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்
தான்னு சொல்லிட்டு கூரைமேல ஏறிட்டாரு.
2.அரசியல்1 : இந்தப் பிச்சைக்காரனை எதுக்கய்யா இங்க அழைச்சிட்டு வந்திருக்கே ?
அரசியல்2 ஓட்டு கேட்கப் போகும்போது தொகுதி முழுக்க
அறிமுகமான ஒரு நபர் கூட வரணும்னு நீங்கதானே சொன்னீங்க !
3.தலைவர் : நீதிபதியை கறுப்பு டிரஸ் போடாம வர வைக்க முடியுமா ?தொண்டர் : எதுக்கு தலைவரே ?
தலைவர் இன்னைக்குக் கறுப்பு எனக்கு ராசியில்லாத
நிறம்னு ராசிபலன்ல போட்டிருக்கு
.4.தொண்டர் 1 : சட்டசபையில் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற எம்.எல்.ஏ.க்கள் கூட தொணதொணன்னு தலைவர் பேசிக்கிட்டே இருக்காரே, என்ன விசயம்?
தொண்டர் 2 : சட்டசபையில் தலைவர் பேசவே இல்லைன்னு
யாரும் சொல்லிடக்கூடாது அதுக்குத்தான் இப்படிப்
பேசிட்டிருக்காரு.
5.தொண்டர் 1 : தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா ? பிற்போக்கை விரும்பறாரா ?
தொண்டர் 2 : ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான்
விரும்புகிறார்.
6.தொண்டர் 1 : நான் குரல் கொடுத்தா இமயமலை வரை கேட்கும்னு தலைவர் சொன்னது தப்பாப்போச்சு!
தொண்டர் 2 : ஏன்?
தொண்டர் 1 : மாநாட்டில் தலைவர் பேசறதுக்கு மைக்கே அரேஞ்ச்
பண்ணலையாம்!
7. தொண்டன் 1 : இன்சுரன்ஸ் ஏஜெண்ட் யாரையாவது கூட்டிகிட்டு வாய்யான்னு தலைவர் சொல்றாரே எதுக்கு?
தொண்டன் 2 : தனக்குன்னு ஒரு பாலிசி இல்லாதவர்னு அவரைக்
கிண்டல் பண்றவங்க வாயை அடைக்க ஒரு பாலிசி (LIC Policy)
எடுக்க போறாராம்.
8.தொண்டர் 1 : மைக்ல ஒரு டப்பா கட்டித் தொங்க விட்ருக்கே ஏன் ?தொண்டர் 2 : தலைவர் எதிர் கட்சிய பற்றி பேசுறப்ப காறி
துப்புவார் அதற்கு தான்...
9.தொண்டன் 1 : என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?
தொண்டன் 2 : அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா
புரிஞ்சுக்கிட்டாரு.
10.தொண்டர் 1 : நம் அரசரை தேடி மாலையும் கழுத்துமாக பொண்ணும், மாப்பிள்ளையும் வந்திருக்காங்களே, வாழ்த்து வாங்கவா?
தொண்டர் 2 : கல்யாண விருந்துல மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு
மொய் வைக்காமல் வந்து விட்டாராம் மன்னர்.
11.தொண்டர் : தலைவரே நீங்க.. இப்ப சொன்னது நூத்துக்கு 100 உண்மை!
தலைவர் : யோவ்... நான் ஒன்னுமே சொல்லலே கொட்டாவி
தான் விட்டேன்.
12.தொண்டர் 1 : ஏன் தலைவர் கடுப்பா இருக்காரு..?
தொண்டர் 2 : ஊழல் அரசியல்களை வெளிச்சம் போட்டுக்
காட்டுவோம்-ன்னு மேடையிலே பேசும்போது வீடியோக்காரன்
லைட்டை இவர்மேலே திருப்பிட்டானாம்..!
13.வேட்பாளர் : என் பேரை தர்மம்-னு மாத்திக்கச் சொல்றியே ஏம்பா?உதவியாளர் : தேர்தல்ல நீங்க தோத்துட்டாக்கூட தர்மம்
தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க அதான்!
14.பிரமுகர் : தலைவரே! உங்களை குண்டர் சட்டத்தில் சிறையில் போடபோறாங்கனு சொல்றாங்களே?
தலைவர் : சும்மா இருய்யா. நான் என்ன அவ்வளவு குண்டாவா
இருக்கேன். 50 கிலோ தான் இருக்கேன்.
15.அமைச்சர் : இது எந்த ஊரு? இதுக்கு முன்னாடி எப்பவோ இங்க வந்த மாதிரி இருக்கே ?
தொண்டன் : கொஞ்சம் மெதுவா பேசுங்க தலைவரே. இதுதான்
நீங்க எம்.எல்.ஏ.வாக ஜெயிச்ச தொகுதி.
16.ஒருவர் : காணும் பொங்கலப்ப கடற்கரையில் கூட்ட நெரிசலைக் குறைக்க போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்க..?
கட்சிக்காரர் : தலைவரை பேச வைக்கப் போறாங்களாம்!
17.அமைச்சர் : மன்னா, நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது?மன்னன் : ரிப்பனை கட்டிக் கொண்டு ஒலுங்க ஆடச்சொல்லும் அமைச்சரே?
18.தொண்டர் 1 : தலைவர் எதுக்கு அவர் மனைவி பண்ண பொங்கலை கட்சி ஆபீஸ்-க்கு எடுத்துக்கிட்டு போறாரு..?
தொண்டர் 2 : போஸ்டர் ஒட்டறதுக்காம்..!
19.அமைச்சர்: ஏன்யா... எனக்கு மேடையில நாற்காலி போடல?தொண்டர்: நீங்கதானே தலைவரே எனக்கு நாற்காலி ஆசை இல்லைன்னீங்க.. .!
20.தொண்டர்: தலைவரே, ஆற்காட்டு ரோட்ல பயங்கர டிராஃபிக் ஜாம்!
தலைவர்: அதை ஏன் எங்கிட்ட வந்து சொல்றே?
தொண்டர்: கூட்டம் உள்ள இடத்துல பேசணும்-னு நீங்கதானே ஆசைப்பட்டிங்க!
21.தொண்டர் : தலைவரே பணத்துக்கெல்லாம் ஏன் Fair & Lovely தடவிக்கிட்டு இருக்குறீங்க?
தலைவர் : அதை தடவினா கருப்பெல்லாம் வெள்ளையாகும்-னு சொன்னாங்க, அதான்.
22.தொண்டன் 1: நம்ம தலைவரையே ஒருத்தன் தலைகுனிய வச்சிட்டானே
தொண்டன் 2: யார் அவன் ?
தொண்டன் 1: நம்ம தெருமுனையில இருக்குற சலூன் கடைக்காரன் தான் !
23.தொண்டர்: தொகுதிப் பக்கம் ஏன் தலை காட்டலைனு ஆர்பாட்டம் செய்தவங்களை எப்படிச் சமாதானப்படுத்தினீங்க?
தலைவர்: ஹிஹி... தலையில பொடுகுன்னு சொல்லி சாமாளிச்சுட்டேன் !
24.அரசியல்: மாணவர்களே! நீங்க யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்.
மாணவர்கள்: ஏன்?
அரசியல்: நாங்கள் யாரவது படிப்பில் ஈடுபடுகிறோமா?
25.தொண்டன் : தலைவரே நம்ம பேச்சு மக்களுக்கு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
தலைவன் : இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...
No comments:
Post a Comment