1.சுரேஷ்: இதான் என்னோட குழந்தை
ரமேஷ்: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?
சுரேஷ்: அதைத்தான் நானும் கேக்கறேன். ஆனா, அது பேசறதே புரியமாட்டேங்குது.
2.நண்பன் 1: ஏன் மச்சி உனக்கு SMS ப்ரீதானா? எனக்கு அடிக்கடி SMS அனுப்பேன்!
நண்பன் 2: சரி மாப்ள.. எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா!
3.ராமு: அந்த ஆஸ்பத்திரியில நல்லா கவனிச்சுப்பாங்களாமே
குமாரு: அப்படியா?
ராமு: ஆமா ஊசி போட ஒரு நர்ஸ், தடவிவிட ஒரு நர்ஸ்-னு ரெண்டு பேர் இருக்காங்க!
4.நண்பன் 1: புத்திசாலியா இருந்தாலே பிரச்சனை, என் செருப்பு அறுந்து போயிடுது
நண்பன் 2: புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?
நண்பன் 1: என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே...!
5.ராமு: என் அண்ணன் ரொம்பவும் பகட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகள் மாற்றுவான்!
தாமு: அது பரவாயில்லையே, என் இளைய தம்பி ஒரு நாளைக்கு 6 தடவைகூட உடை மாற்றுவான்.
ராமு: நெஜமாவா சொல்ற.. அவனுக்கு என்ன வயசு இருக்கும்?
தாமு: என்ன பொறந்து 3 மாதம் தான் ஆகுது!
6.சுரேஷ்: டெய்லி சமையல் நீங்கதான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவி தான் பத்த வைக்கிறாங்க, ஏன்?
தானேஸ்: அவதான் பத்தவைக்கிறதுல கில்லாடியாச்சே?
7.பெரியசாமி: எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி: ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா ?
8.ராமு: ஏன்யா துணி துவைக்கற இடத்துல வந்து பால் இருக்கான்னு கேக்கறியே நியாயமா?
சோமு: தப்பா நினைச்சுக்காதீங்க வெளுத்ததெல்லாம் பால்-னு நினைக்கறவன் நான்.
9.நண்பன் 1: நம்ம கிரிக்கெட் டீம் அபாரமா ஜெயிடுச்சுன்னு ஏண்டா பொய் சொன்ன?
நண்பன் 2: உன் விக்கலை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலைடா!
10.கமல் : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?
அமல் : இல்லடா..
அமல் : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.
11.குமார்: டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் பவுடர்.
குமார்: என்ன செண்ட் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் செண்ட்.
குமார்: என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
கார்த்தி: சுனில் ஹேர் ஆயில்.
குமார்: ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
கார்த்தி: இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
12.ராமு: தீபாவளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?
சோமு: தீபாவளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.
13.சுரேஷ்: டெய்லி சமையல் நீங்கதான் பண்றீங்க, ஆனா அடுப்பை மட்டும் உங்க மனைவி தான் பத்த வைக்கிறாங்க, ஏன்?
தானேஸ்: அவதான் பத்தவைக்கிறதுல கில்லாடியாச்சே?
14.ராமு: நா கம்ப்யூட்டர் வாங்கப் போறாண்ட விஜய்...
விஜய்: மச்சா, ஒரு தடவ நம்ம கைக்கு கம்ப்யூட்டர் வந்துட்டா, மொதல்ல fb போவோம் அப்புறம் நாசமா போவோம்!!!
15.நண்பன் 1: என் மச்சா இந்த முறையும் Lovers Day கொண்டாடல போல?
நண்பன் 2: எதுக்கு மச்சா எவனோ கட்டிக்கப்போற ஃபீகருக்கு எதுக்கிடா நாம விழா கொண்டாடனும்..
16.நண்பன் 1: என் மச்சா இந்த முறையும் Lovers Day கொண்டாடல போல?
நண்பன் 2: எதுக்கு மச்சா எவனோ கட்டிக்கப்போற ஃபீகருக்கு எதுக்கிடா நாம விழா கொண்டாடனும்..
17.சிவா: ஜனவரி-14 க்கும், பிப்ரவரி-14 க்கும் என்ன வித்தியாசம்?
ஜீவா: ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி-14! அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி-14!!
18.ராமன்: என் மனைவி என்னை தெய்வமா மதிக்கிறாங்க.
தாமன்: அப்ப உங்களை மனுஷனாவே மதிக்கறதில்லைன்னு சொல்லுங்க
19.நண்பன் 1: Love marriage-க்கும், Arranged marriage-க்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2: நம்ம கிணத்தில விழுந்தா Love marriage, பத்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டா அது Arranged marriage
20.ராகுல்: ரொம்ப நாள் வாழ என்ன பன்னனும்
திகுல்: கல்யாணம் பன்னிக்கோ
ராகுல்: கல்யாணம் பன்னிக்கிட்டா ரொம்ப நாள் வாழலாமா
திகுல்: இல்லை. ஆனா, உனக்கு ரொம்ப நாள் வாழனுங்கிர எண்ணமே வராது
21.ராமு: இந்த SMS-ஐ ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
சோமு: இல்லையே!
ராமு: அதுசரி, சும்மாவா சொன்னாங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!
22.மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல போடச் சொன்னாரு
ஜக்கு: ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்-னு கேட்டேன்!
23.ராமு : என் மனைவி செய்யற பொங்கல் பட்டாசா இருக்கும்?
சோமு : அவ்வளவு நல்லாவா இருக்கும்..?
ஒருவர் : நீ வேற! ரொம்ப ஆபத்துன்னு சொல்ல வந்தேன்.
24.அமலா: நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
விமலா: எதை வைத்து?
அமலா: பேனாவை வைத்து தான் எழுதினேன்!
25.ராமு: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்.
சோமு : எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்.
25.ராமு : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சா. எப்படி ?
சோமு: காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னிட்டா.
No comments:
Post a Comment