1.கணவன்: குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா?
மனைவி: இல்லே.... அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் சாப்பிட்டுகிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் சாப்பிட்டாரு அதான்....
2.கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல் தான் பரவுது! அது எப்படி உங்களுக்கு வரும்..
3.மனைவி :ஏங்க என் பிரசவ நேரத்தில உதவியா இருக்க எங்கம்மாவை வரவழைச்சிடட்டுமா?
கணவன் :வயசான காலத்தில அவங்களை ஏன் சிரமப்படுத்தறே, பேசாம உன் தங்கச்சியை வரவழைச்சிடு!
4.மனைவி: அன்பே.. இன்று நமது கல்யாண நாள். எப்படி கொண்டாடுவது?
கணவன்: 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்..
5.மனைவி :மாட்டுப் பொங்கல் அன்னைக்கு நம்ம மாட்டுக்கு என் கையால நானே பொங்கல் பண்ணி ஊட்டி விடணும்ங்க ?
கணவன் :நமக்கு நல்லது செய்யற வாயில்லா ஜீவனுக்கு நீ செய்யற பதில் நன்றி இதுதானா ?
6.கணவன்: அரைமணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?
மனைவி: எனக்கு கரடி பாசை புரியலேன்னு அர்த்தம்.
7.கணவன் லதா... எதுக்கு நீ வெள்ளிக்கிழமை மட்டும் ரொம்ப ருசியா சமைக்கிற?
மனைவி அன்னைக்கு தானே உங்கம்மா சாப்பிடாம விரதம் இருக்காங்க!
8.மனைவி :வர வர நீங்க இளைச்சிக்கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க....
கணவன் : நீ என்ன சொன்னே?
மனைவி :ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு, வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்-னு சொன்னேங்க.
9.கணவன் : நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.
மனைவி : ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க ?
கணவன் பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடுன்னு திருடன் கரெக்ட கேட்டானே.
10.மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .
கணவன்: வேற என்னதான் போட்ட?
மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்
11.கணவன் கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் சங்கு சக்கரம் சுத்தமாட்டேங்குது !
மனைவி முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு !
12.மனைவி என்னங்க... திருடன் பாட்டுக்கு நம்ம வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான், நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க?
கணவன் : சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா.
13.கணவன் : உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?
மனைவி உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?
14.மனைவி தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடியே உங்க அம்மாவை வரச் சொல்லுங்க.
கணவன் : எதுக்குடி ?
மனைவி நம்ப வீட்டு வேலைக்காரி லீவு எடுத்துட்டு ஊருக்குப் போறாளாம்.
15.மனைவி: ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்-னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.
கணவர்: அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட
.
16.கணவன் : கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?
மனைவி : ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்-னு வேண்டிகிட்டேன். நீங்க?
கணவன் : இது ஏழாவது பிறவியா இருக்கணும்-னு வேண்டிகிட்டேன்.
17. கணவன் : நீ தான் எனக்கு மனைவியா வருவன்னு எங்க ஸ்கூல் மிஸ் அப்பவே சொன்னங்க.
மனைவி : எப்படி சொன்னாங்க..
கணவன் : பண்ணி மேய்க்க தான் நீ லாயக்குன்னு சொன்னங்க
18.கணவன் : 1000 தான் இருந்தாலும் நீ எனக்கு பொண்டாட்டி!!
மனைவி : அப்படினா என்ன நீங்க செல்லாகாசுனு சொல்றீங்களா.
19.கணவன்: உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?
மனைவி : நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்.
20.கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே.. என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்...
21.கணவன்: வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல
மனைவி: தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே.
22.கணவன் : சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே ?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
23.மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே.. கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா ?
கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன் ?
24.கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?
மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க !
25.கணவன் : தொப்புன்னு சத்தம் கேட்டுதே... கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா !
மனைவி : முடியாது ! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது !
26.கணவன் : சென்ஸார் அதிகாரிங்க வந்திருக்காங்க.
மனைவி : எதுக்காம் ?
கணவன் : நீயும் என் அம்மாவும் போடற சண்டையில் அளவுக்கு மீறி வன்முறை இருக்குனு அவங்களுக்குத் தகவல் போயிருக்குதாம்.
27.கணவன் :என்னங்க.. உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..
மனைவி : எதுக்கு இவ்ளோ அவசரம்?
கணவன்: உங்க அம்மாவையும், அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியல..!
No comments:
Post a Comment